'கடாரம் கொண்டான்' அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனருடன் 2-வது முறையாக இணையும் விக்ரம்
பதிவு: ஜூன் 29, 2019 15:47
விக்ரம்
இயக்குனர் லிங்குசாமி 'ஆனந்தம்' படத்தின் மூலம் 2001-ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி போன்ற தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார்.
இதையடுத்து இவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தன. இதேபோல் கடந்த 2008-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படம், விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், லிங்குசாமி-விக்ரம் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' அடுத்த மாதம் வெளியாக உள்ளது. விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதன்பின்னர் லிங்குசாமியின் படத்தில் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :