அப்போது நாயகியின் தந்தையான போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகராஜன் திலீப்பை வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக கைது செய்கிறார். இதனால் நாயகி மனமுடைந்து போகிறார். திலீப் எதற்காக திருடினான். நாயகி, திலீப்பை மன்னித்து காதலை ஏற்றுக்கொண்டாளா?. நாயகியின் தந்தை திருடனான திலீப்புக்கு தன் மகளை கட்டிக்கொடுத்தாரா என்பது மீதிக்கதை.
திலீப் குமார் கிராமத்து வாலிபராகவும், தாய் மீது மிகுந்த பாசமுடைய மகனாகவும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.
நாயகி மணிஷாஜித் கல்லூரி மாணவியாக வந்து மனதில் நிற்கிறார். தன் காதலன் திருடன் என்பதை அறிந்து வேதனையில் வாடும் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, சண்முகராஜன், சஷிகுமார், நாயகனுக்கு அம்மாவாக வரும் ஸ்டெல்லா, நாயகி தோழி நட்சத்திரா ஆகியோர் அவரவர் காதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.
ஆதீஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அருமை.
மகிபாலன் ஒளிப்பதிவில் கிராமத்து வாசம் வீசுகிறது.
படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆனந்த். நெய்வேலியில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதையாக சித்தரித்து இருக்கிறார். இதில் தாய்- மகன் பாசம் மற்றும் காதல் காட்சிகளை திறம்பட இயக்கியிருக்கிறார். இருப்பினும், பழங்கால கதைப்போல் உள்ளது படத்திற்கு தொய்வு.
கிளைமாக்ஸ் காட்சியில் ஜாதி என்பது வாழ்க்கைக்கு நல்லது செய்யாது. அது அழிக்கத்தான் செய்யும். ஜாதி மத வேற்றுமையின்றி வாழவேண்டும் என்பதை 'மௌன மழை' படத்தின் மெசேஜாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.