திருச்சியில் ஒயின்ஷாப்பில் நாயகன் ரோஷன் மற்றும் அவனின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக வேலை பார்க்கின்றனர். வாரத்தில் விடுமுறை நாளன்று வெளியில் சென்று குடியும் கும்மாளமுமாக இருப்பது இவர்களுடைய வழக்கம். ஆனால், இவர்களில் ஒருவன் மட்டும் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்து வருகிறான்.
முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்த அவன் ஒரு பிராமணப் பெண்ணை காதலிக்கிறான். இருவருடைய காதலும் ஒருநாள் அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்துவிடுகிறது. அவர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் மனமுடைந்த அந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறாள்.
இதை அறிந்த நாயகன் மற்றும் அவனுடைய நண்பர்கள் அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு செல்கிறார்கள். அப்போது போகும் வழியில் இவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கிவிட, நாயகன் நண்பனின் காதலி சம்பவ இடத்திலேயே இறந்துவிடுகிறாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் நண்பன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான்.
அங்கு அவனுக்கு சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுகிறது. நாயகனின் ரத்தமும், நண்பனின் ரத்தமும் ஒரே குரூப்பாக இருப்பதால் ரத்தம் கொடுக்க முன்வருகிறான். ஆனால், நாயகனுடைய ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் இவருடைய ரத்தத்தை எடுக்க டாக்டர்கள் மறுக்கின்றனர். இதையடுத்து நண்பன் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறான்.
தன்னுடைய உயிருக்குயிரான நண்பனை காப்பாற்ற வழியிருந்தும் இந்த குடியால் அது முடியாமல் போயிற்றே என்ற வருத்தத்தில் அன்றிலிருந்து குடியை நிறுத்திவிடுகிறான். தொடர்ந்து அதே ஒயின்ஷாப்பில் பணிபுரிகிறான். எந்நேரமும் சோக முகமாய் வலம் வரும் நாயகனை, கோவையிலிருந்து திருச்சியில் படிப்பதற்காக வரும் நாயகி டிங்கிள் ஒரு தலையாய் காதலிக்கிறாள். தனது காதலை நாயகனிடம் சொல்லும்போது, அதை ஏற்க அவன் மறுக்கிறான். இதற்குண்டான காரணத்தை அவனுடைய நண்பன் மூலம் அறியும் நாயகி, தனது காதலை நாயகனுக்கு புரிய வைத்து அவனுடன் சேர்ந்தாளா? இல்லையா? என்பதே மீதிக் கதை.
நாயகனாக வரும் ரோஷன் சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பனை காப்பாற்ற முடியாத சோகத்தில் இவர் காட்டும் நடிப்பு ரசிக்க வைக்கிறது. நாயகி டிம்பிள் அழகாக இருக்கிறார். இவர் படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே என்றாலும், தன்னுடைய பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
பாண்டியராஜன், மயில்சாமி, ஸ்வாதி, நளினி, மயில்சாமி, முத்துக்காளை ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள்.
படம் முழுக்க குடி, குடியென்று காட்சியை வைத்திருந்தாலும், குடிப்பதால் ஏற்படும் தீமைகளையும், அதனால் நாம் இழக்கும் சந்தோஷங்களையும் காட்சிப்படுத்திய இயக்குனர் ரவிப்பிரியனுக்கு பாராட்டுக்கள். திரைக்கதையை மிகவும் லாவகமாக கையாண்டுள்ளார். ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ரவிசுந்தரம் ஒளிப்பதிவில் திருச்சியை சுற்றிய பகுதிகளை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘சத்திரம் பேருந்து நிலையம்’ கல்லா கட்டும்.