இதில் சஞ்சீவுக்கும் பண்ணையாருக்கும் மோதல் உருவாகிறது. பண்ணையார் தங்கைக்கு திருமணம் ஏற்பாடாகிறது. அவளோ காதலனை இழுத்துக் கொண்டு ஓடுகிறாள். சஞ்சீவ் அவளுக்கு உதவி செய்து வெளியூருக்கு தப்ப வைக்கிறார். இதனால் பண்ணையார் கும்பல் சஞ்சீவையும், அவர் நண்பர்களையும் பழி தீர்க்க திட்டம் போடுகிறது. அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பது மீதி கதை...
சஞ்சீவ் துறுதுறுவென குறும்பு செய்கிறார். கடன் வாங்கி ஏமாற்றுவது. போதை போட்டு ஆடுவது... பெண்கள் பின்னால் சுற்றுவது என நண்பர்கள் கலாட்டாக்கள் சுவாரஸ்யம். பண்ணையாருக்கும் சஞ்சீவுக்கும் தகராறு மூண்டதும் விறுவிறுப்பாகிறது.
மோனிகா அழகாய் கவர்கிறார். மனோபாலா காமெடி போலீசாக சிரிக்க வைக்கிறார். கே.ரவீந்திரன் வில்லத்தனத்தில் குரூரம் காட்டுகிறார். தந்தை கேரட்டரில் பாண்டியராஜன் அழுத்தம் பதிக்கிறார்.
ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்கின்றன. பிற்பகுதி ஆக்ஷனுக்கு மாறியதும் வேகம். சாமிதுரை இயக்கியுள்ளார். அருள் ராஜ் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன.