நடிகர் கோபிகாந்தின் ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் பட நிறுவனம் ஒரே சமயத்தில் வீரக்கலை, வைரமகன் என இரு படங்களைத் தயாரித்துள்ளது.
இந்த இரு படங்களை கோபிகாந்த் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இதில் வீரக்கலை படத்தை பீனிக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
வைரமகன் படத்தில் கோபிகாந்த் ஜோடியாக சுகன்யா ஸ்ரீ - சுதா என இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் போண்டாமணி, நெல்லைசிவா, விஜயகணேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.எஸ்.சூர்யா இசையமைத்துள்ளார். இயக்கம் - முருகவேல், வைரமகன் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான கோபிகாந்த் கூறும்போது, ஒரு ஏழை மாணவனின் போராட்டத்தைச் சொன்ன முதல் மாணவன் படம் மூலமாக திரையுலகத்துக்குள் நுழைந்தேன். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வீரக்கலை, வைரமகன் என இரு படங்களை எடுத்து முடித்துள்ளேன்.
வைரமகன் படத்தில் தாய் - மகன் நடுவே உள்ள பாசப் போராட்டத்தை மையக் கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு விபத்தில் சிக்கும் தாய் மகனை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி சுய நினைவை இழந்து கண்காணாத இடத்துக்கு செல்கிறாள். தாய் பாசத்திற்காக ஏங்கும் மகன் தாயைத் தேடி ஊர் ஊராக அலைகிறான்.
காணாமல் போன தாயை மகன் கண்டுபிடித்தானா? தாய்க்கு நினைவு திரும்பியதா? என்பதை படம் உருக்கமாகச் சொல்கிறது.
தாய் பாசத்தோடு காதல், காமெடி, அதிரடி என ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான எல்லா அம்சங்களோடும் படம் உருவாக்கியுள்ளது என்றார்.