மடக்கலா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் மோர் மொளகா. கொங்கு மண்டலத்தை சேர்ந்த சேந்தன் லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று இதில் சாகா மனிதனாக நடிக்கிறார். மத்திய உளவு பிரிவு திறமை சாலிகளாக தமிழ், ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர்.
கதாநாயகி மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆத்மா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.
ஒளிப்பதிவு- ஷ்யாம் ராஜ், சண்டைபயிற்சி- தவசிராஜ்.
படப்பிடிப்பு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராம்கிரிஷ்மிரிணாளினி. படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்று விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி எதனாலும் வீழ்த்த முடியாத சாகாத மனிதன் ஒருவனை உருவாக்கி இந்தியாவை சீர் குலைக்க அனுப்புகிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட இந்திய அரசாங்கம் மத்திய உளவு பிரிவு மூலம் இரண்டு பேரை தயார் செய்கிறது.
அந்த திறமை சாலிகள் இருவரும் சாகா மனிதனை வென்றார்களா? நாட்டை அவனிடமிருந்து காப்பாற்றினார்களா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் படமாக மோர் மொளகா உருவாகி வருகிறது என்றார்.