என் மலர்

  கிரிக்கெட்

  ப்ரதோஷ் ரஞ்சன் அதிரடி: திருப்பூருக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
  X

  ப்ரதோஷ் ரஞ்சன் அதிரடி: திருப்பூருக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
  • திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  சேலம்:

  8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் இந்த தொடரில் சேலத்தில் இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  அதன்படி சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் களமிறங்கினர். இதில் சந்தோஷ் குமார் 8 ரன்னிலும் அடுத்து வந்த 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜெகதீசன் - ப்ரதோஷ் ரஞ்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர்.

  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெரில் 4, சித்தார்த் 23, அபிஷேக் தன்வர் 2 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தனி ஆளாக போராடிய ப்ரதோஷ் அரை சதம் அடித்து அசத்தினார்.

  இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. ப்ரதோஷ் ரஞ்சன் 67 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  Next Story
  ×