என் மலர்

    செய்திகள்

    அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
    X

    அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமெரிக்காவில் ராணுவத்துக்கு ரூ.45½ லட்சம் கோடி நிதி ஒதுக்க வகை செய்யும் பட்ஜெட் மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்மூலம் ராணுவத்தை நவீனமயம் ஆக்குவதிலும், புதிய தளவாடங்களை வாங்கி குவிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

    அங்கு ஒபாமா அதிபராக இருந்தபோது, 2017-ம் ஆண்டுக்கு ராணுவத்துக்கு 618 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 லட்சத்து 17 ஆயிரம் கோடி) ஒதுக்கப்பட்டது.

    அங்கு கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அவரும் ஒபாமாவைப் போன்று ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    அந்த வகையில் 2018-ம் ஆண்டில் ராணுவத்துக்கு 700 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குவதற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்ட மசோதா-2018 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.45½ லட்சம் கோடி ஆகும்.

    இந்த தொகை டிரம்ப், முதலில் கேட்ட தொகையை விட 26 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் கோடி) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த மசோதா முதலில் பாராளுமன்ற செனட் சபையில் (மேல்சபையில்) கடந்த வியாழக்கிழமை நிறைவேறியது. நேற்று பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 356 ஓட்டுகளும், எதிராக 70 ஓட்டுகளும் விழுந்தன.

    இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்பின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ராணுவ பட்ஜெட் பிரச்சினையின்றி நிறைவேறி இருப்பதை மூத்த செனட் சபை உறுப்பினர் ஜான் மெக்கைன் வரவேற்றுள்ளார். மசோதாவை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

    மசோதாவில், புதிய எப்-35 போர் விமானங்கள், போர்க் கப்பல்கள், எம்-1 ஆப்ராம்ஸ் டாங்குகள் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது. படை வீரர்களின் சம்பளத்தை 2.4 சதவீதம் உயர்த்தவும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவுடன் முன்னோக்கிய பார்வையுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்காக 4.9 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கு கூட்டணி ஆதரவு நிதி வகைக்கு 350 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,275 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்படுகிற இந்த நிதி, பயங்கரவாத கும்பல்களுக்கு பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதால், இதை உற்றுநோக்கி கவனிக்குமாறு அமெரிக்க ராணுவ துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×