என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை - பாக். வெளியுறவு மந்திரி
    X

    பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை - பாக். வெளியுறவு மந்திரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டது இல்லை என அந்நாட்டு வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை நேற்று வெளியிட்டார். அதில், தாலிபான்களை ஒழித்துக்கட்டும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப முடிவெடுக்கப்பட்டிருந்தது. மேலும், தாலிபான்கள், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில் கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்க்கொள்ள வேண்டியவரும் எனவும் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப், பாகிஸ்தானை போல தீவிரவாதத்திற்கு எதிராக யாரும் போரிட்டது இல்லை என கூறியுள்ளார்.

    மேலும், “அமெரிக்காவின் புதிய கொள்கை குறித்து மந்திரி சபையை கூட்டி விவாதிக்க உள்ளோம். ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை என்பதே பாகிஸ்தானின் நோக்கம் மற்றும் ஆசையாகும்’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×