என் மலர்

    செய்திகள்

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் அளித்தேனா?: தினகரன் பேட்டி
    X

    ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் அளித்தேனா?: தினகரன் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேலிடம் டி.டி.வி. தினகரன் அளித்தாரா என்பது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் விளக்கம் அளித்தார்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம் முசிறியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

    இதில் பங்கேற்று பேசிய திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் தினகரன்ஆதரவாளருமான ராஜசேகரன் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்கட்சிகள் வெற்றி பெறுவதற்காக செய்த சூழ்ச்சிகளை முறியடிக்க டி.டி.வி.தினகரனிடம் முறையிட்டதை அடுத்து தினகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிடுங்கள் எனக்கூறி வெற்றிவேலிடம் சி.டியை கொடுத்தார்.

    வீடியோ காட்சியை வெளியிட வெற்றிவேல் தயங்கிய போது ஒரு வழக்கு தானே வரும் பார்த்து கொள்ளலாம் என தைரியம் கூறி அனுப்பி வைத்தோம். முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து மாஸ்டர் பிளான் செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற நிர்வாகிகள் தயாராக வேண்டும் என்று பேசினார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில் இன்று கரூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த டி.டி.வி.தினகரனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், எனது ஆதரவாளர் ராஜசேகரன் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. அப்படி அவர் பேசியிருந்தால் அது தவறு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றிய சிகிச்சை வீடியோவை நான் வெற்றிவேலிடம் அளிக்கவில்லை என்றார். #tamilnews

    Next Story
    ×