என் மலர்

    செய்திகள்

    கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஓ.பி.எஸ். கிணறு
    X

    கிராம மக்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஓ.பி.எஸ். கிணறு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரியகுளம் அருகே ராட்சத கிணறை ஓ.பன்னீர்செல்வம் தானமாக கிராம மக்களுக்கு வழங்கினார்.
     பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான இடத்தில் ராட்சத கிணறு தோண்டப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என கூறி பல்வேறு தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தினர்.

    இதையடுத்து கிணற்றில் இருந்து 3 மாதங்களுக்கு இலவசமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளவும், நிலத்தை வாங்கினால் கிணற்றை தானமாக தருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே இந்த நிலத்தை தனது நண்பர் சுப்புராஜ் பெயருக்கு மாற்றி எழுதி விட்டதாக பொதுமக்கள் ஆத்திரமடைந்து மீண்டும் மனித சங்கிலி போராட்டம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் 100 ரூபாய் பத்திரத்தில் கிணற்றை கிராம மக்களுக்கு தானமாக கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அதில் சுப்புராஜ் கையெழுத்திட்டார். நாளை திங்கட்கிழமை முறைப்படி கவர்னர் பெயருக்கு பத்திரம் பதிந்து லட்சுமிபுரம் ஊராட்சி கிராம மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பதாகவும் அதில் எழுதப்பட்டுள்ளது.

    கிணறு மற்றும் நிலத்தை தானமாக வழங்கிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து கிராம கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×