என் மலர்

    செய்திகள்

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
    X

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்கம் 1-ஏ சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் உயிர் சேதம், பொருட்சேதம் இல்லை.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சுரங்கம் 1, 1-ஏ, சுரங்கம்-2 ஆகிய 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு நெய்வேலியில் அமைந்துள்ள 3 அனல் மின் நிலையங்களுக்கு தனித்தனியாக மின் உற்பத்திக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

    எஞ்சியுள்ள கூடுதல் நிலக்கரியை பங்கர் என்று சொல்ல கூடிய நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தனித்தனியாக தினமும் சேமித்து வைக்கப்படும். அனல் மின்நிலையங்களுக்கு அதிகமாக நிலக்கரி தேவைப்படும் போது இந்த பங்கர் பகுதியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக அனுப்பப்படும்.

    இந்த நிலையில் சுரங்கம் 1-ஏ சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே நெய்வேலி என்.எல்.சி. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம், பொருட்சேதம் இல்லை.

    இது குறித்து நெய்வேலி என்.எல்.சி. அதிகாரி கூறும் போது, “சேமிப்பு கிடங்கில் (பங்கர்) அழுத்தம் காரணமாகவும், தட்ப வெப்ப நிலை, உயர் வெப்பம் காரணமாகவும் சில நேரங்களில் தீப்பிடிப்பது இயல்பு. சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் கொண்டு அனைத்து முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். வெயில் காலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது சாதாரணமானதுதான்” என்றார்.
    Next Story
    ×