என் மலர்

    செய்திகள்

    பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி கடலில் நவீன படகு மூலம் கண்காணிப்பு
    X

    பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி கடலில் நவீன படகு மூலம் கண்காணிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    கன்னியாகுமரி:

    நாளை (6-ந் தேதி) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் 4 அதிநவீன படகுகள் மூலம் கடலில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து முட்டம் வரையும், முட்டத்தில் இருந்து நீரோடி வரையும், கன்னியாகுமரியில் இருந்து உவரி வரையும், உவரியில் இருந்து கூடங்குளம் வரையும் 4 வழிகளில் இந்த கண்காணிப்பு பணி நடந்தது.

    இந்த படகுகளில் உள்ள போலீசார் சக்தி வாய்ந்த பைனாகுலர்கள் மூலம் கடல் பகுதியை கண்காணித்தனர். கடலில் மீன் பிடித்துவிட்டு திரும்பிய மீனவர்களின் படகுகளையும் போலீசார் சோதனை செய்தனர். இந்த மீனவர்களிடம் உள்ள அடையாள அட்டைகளும் சரிபார்க்கப்பட்டது. மேலும் 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கட்டுப்பாட்டில் 11 சோதனை சாவடிகள் உள்ளன. சின்னமுட்டம், தேங்காய்பட்டினம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், குளச்சல் உள்பட 11 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

    கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். இங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    விவேகானந்தர் மண்டபத்தை படகு மூலம் சென்று பார்க்கும் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே படகில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

    இதே போல் பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர். அவர்கள் கைப்பை உள்பட எந்த பொருட்களையும் கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    குமரி மாவட்டம் முழுவதும் உள்ள லாட்ஜுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியாக யாரும் தங்கி உள்ளார்களா? என்று போலீசார் சோதனை செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் இரவு முதல் விடியவிடிய தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டது.
    Next Story
    ×