என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தான் அணி 74 ரன்னில் சுருண்டது: 183 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி
    X

    பாகிஸ்தான் அணி 74 ரன்னில் சுருண்டது: 183 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 183 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. #NZvPAK
    டுனிடின்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டியில் முதல் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

    நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் ஆட்டம் டுனிடினில் இன்று நடந்தது.

    முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 257 ரன்னில் ‘ஆல்- அவுட்’ ஆனது. கேப்டன் வில்லியம்சன் 73 ரன்னும், டெய்லர் 52 ரன்னும், குப்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஹசன் அலி, ரயிஸ் தலா 3 விக்கெட்டும், சதாப்கான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து வீரர்களின் ஆபாரமான பந்துவீச்சால் 74 ரன்னில் சுருண்டது.

    இதனால் பாகிஸ்தான் அணி 183 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

    பாகிஸ்தான் அணியின் 4-வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 43 ரன்னில் (1993) சுருண்டதே குறைந்தபட்ச ரன்னாகும்.

    பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளரான ரூயிஸ் கான் அதிகபட்சமாக 16 ரன் எடுத்தார். கேப்டன் சர்பிராஸ் தவிர முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    போலட் 17 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். முன்ரோ, பெர்குசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.



    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. 4-வது போட்டி வருகிற 16-ந்தேதி ஹேமில்டனில் நடக்கிறது.
    Next Story
    ×