என் மலர்

    செய்திகள்

    செஞ்சூரியன் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை: டு பிளிசிஸ் சொல்கிறார்
    X

    செஞ்சூரியன் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை: டு பிளிசிஸ் சொல்கிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செஞ்சூரியன் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று தெரியவில்லை என்று தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். #SAvIND #duPlessis
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தியாவை முதல் போட்டியிலேயே அதிக வித்தியாசத்தில் வீழ்த்தி தன்னம்பிக்கை குலைக்க வேண்டும் என்பதற்காக ஆடுகளத்தை அதிக புற்களுடன் தயார் செய்ய வேண்டும் என்று தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் வெளிப்படையாக கேட்டுக்கொண்டார். கேப் டவுன் ஆடுகளம் பவுன்ஸ், வேகத்துடன் ஸ்விங்கும் ஆனது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சாதிக்கவில்லை.

    என்றாலும், நாம் 200 ரன்கள் அடித்தால் இந்தியாவை 150 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் நினைக்கிறார்.

    இதனால் நாளை தொடங்கும் செஞ்சூரியன் டெஸ்டிற்கான ஆடுகளத்தையும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்ய தென்ஆப்பிரிக்கா அணி வலியுறுத்தியது. ஏற்கனவே செஞ்சூரியன் ஆடுகளத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிக அளவில் இருக்கும். அத்துடன் பந்து ஸ்விங் ஆகும் வகையில் புற்கள் வைக்க தென்ஆப்பிரிக்கா நிர்வாகம் விரும்பியது.

    ஆனால் இன்று இரு அணி கேப்டன்களும் ஆடுகளத்தை பார்வையிட்டனர். அப்போது ஆடுகளத்தில் பச்சை புற்கள் காணவில்லை. அதற்குப் பதிலாக புற்கள் பழுப்பு நிறத்தில் சற்று காய்ந்து இருந்தது. இதை டு பிளிசிஸ் எதிர்பார்க்கவில்லை.

    இதனால் ஆடுகளம் எப்படி செயல்படும் என்று தெரியவில்லை என்று தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறியுள்ளார்.



    இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘ஆடுகளம் நான் நினைத்ததை விட சற்று காய்ந்த புற்களுடன் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக செஞ்சூரியனில் கடும் வெப்பம் நிலவியதால் புற்கள் காய்ந்து விட்டதாக கிரவுண்ட்மேன் தெரிவித்தார்.

    நாங்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்குமான ஆடுகளம் கேட்டோம். ஆகவே, அடுத்த ஐந்து நாட்களில் ஆடுகளம் அவ்வாறு இருக்கும் என்று நம்புகிறோம்.

    ஆடுகளத்தைப் பார்த்தால் பச்சை புற்கள் அதிகள அளவில் இல்லை. இது சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். கூடுதலாக பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் என்று நம்புகிறேன்.

    உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால், சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்குமா என்பது எனக்குத் தெரியாது. பொதுவாக செஞ்சூரியன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு எடுபடாது. ஆனால், அதிக அளவிலான பழுப்பு நிற புற்கள் உள்ளன. இது செஞ்சூரியன் ஆடுகளத்திற்கு மாறான ஒன்றுமில்லை.

    தற்போது வரை எங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. போட்டி தொடங்கிய பிறகுதான் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்க்கனும். தற்போதைய சூழ்நிலையில் பந்து சற்று ஸ்பின் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்றார்.
    Next Story
    ×