என் மலர்

    செய்திகள்

    இந்தியா மட்டுமல்ல, அனைத்து நாட்டு டாப் ஆர்டர்களுக்கும் இந்த நிலைதான்: ஒரு அலசல்
    X

    இந்தியா மட்டுமல்ல, அனைத்து நாட்டு டாப் ஆர்டர்களுக்கும் இந்த நிலைதான்: ஒரு அலசல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டும் திணறவில்லை. ஒட்டுமொத்த சர்வதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தென்ஆப்பிரிக்கா மண்ணில் திணறிதான் வருகிறார்கள். #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியால் தென்ஆப்பிரிக்காவில் சாதிக்க முடியும், இந்திய அணி சரியான கலவையில் உள்ளது, பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தும் திறமை படைத்தவர்கள் என்று கூறப்பட்டது.

    கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் அசத்தினார்கள். ஆனால், பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சொதப்பினார்கள். குறிப்பாக தொடக்க வீரர்கள், 2-வது மற்றும் 3-வது வீரர்களாக இறங்கியவர்களும் அதிக ரன்கள் குவிக்கவில்லை.



    தொடக்க வீரராக களம் இறங்கிய முரளி விஜய் முதல் இன்னிங்சில் 1 ரன்னும், 2-வது இன்னிங்சில் 13 ரன்களும் எடுத்தார். தவான் இரண்டு இன்னிங்சிலும் தலா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா முதல் இன்னிங்சில் 26 ரன்களும், 2-வது இன்னிங்சில் 4 ரன்களும் எடுத்தார். 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2-வது இன்னிங்சில் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கடும் விமர்சனம் எழும்பியது.

    ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் சர்வதேச அணிகளின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.



    கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் சராசரியை பா்த்தோம் என்றால், இலங்கை அணி 38.50 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா 36.92, நியூசிலாந்து 36.12, இந்தியா 34.20, இங்கிலாந்து 34.09, வெஸ்ட் இண்டீஸ் 34.08 ரன்களும் எடுத்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடிய தென்ஆப்பிரிக்காவின் சராசரி 25.29.

    2010-ம் ஆண்டில் இருந்து தென்ஆப்பிரிக்கா மண்ணில் 36 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதல் மூன்று வீரர்கள் 210 முறை பேட்டிங் பிடித்துள்ளனர். இதில் வெறும் 7 சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர். சராசரி 25.29 மட்டுமே.

    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 32 டெஸ்டில் 180 இன்னிங்சில் 11 சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

    இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவது வழக்கமான ஒன்றுதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
    Next Story
    ×