என் மலர்

    செய்திகள்

    டோனி ரிவியூ சிஸ்டத்தை எதிர்த்து தோற்ற குல்தீப் யாதவ்
    X

    டோனி ரிவியூ சிஸ்டத்தை எதிர்த்து தோற்ற குல்தீப் யாதவ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டோனி முடிவை எதிர்த்து டி.ஆர்.எஸ். கேட்ட குல்தீப் யாதவ் ஏமாற்றம் அடைந்தார்.
    மும்பை:

    நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை கையாள்வதில் இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கில்லாடி. அதனால் தான் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை சில சமயம் ‘டோனி ரிவியூ சிஸ்டம்’ என்று வர்ணிப்பது உண்டு.

    டோனியின் புத்திகூர்மையை, நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் காண முடிந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. 14-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசினார்.

    அந்த பந்தை இலங்கை அணியின் அகிலா குணரத்னே எதிர்கொண்டார். அந்த பந்து அவரது காலுறையில்(பேடு) பட்டது. உடனே இந்திய வீரர்கள் அவுட் கேட்டு முறையிட்டனர். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

    பந்துவீசிய குல்தீப், டி.ஆர்.எஸ். எடுக்குமாறு ரோகித் சர்மா மற்றும் டோனியிடம் கேட்டார். ஆனால் டோனி வேண்டாம் என கூறினார். இருப்பினும் குல்தீப் தொடர்ந்து கேட்டுக்கொண்டதையடுத்து, ரோகித் டி.ஆர்.எஸ். எடுத்தார்.


    பிறகு ‘ரீப்ளே’யில் பந்து ஸ்டெம்புக்கு மேல் அம்பயர்ஸ் கால்(umpires call) பகுதியில் பட்டதால் நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.



    இதனால் டோனியின் முடிவை எதிர்த்து முறையிட்ட குல்தீப் யாதவ் ஏமாற்றம் அடைந்ததோடு, இந்திய அணியும் டி.ஆர்.எஸ்.சை இழந்தது.
    Next Story
    ×