என் மலர்

    செய்திகள்

    ரஞ்சி டிராபி பைனலுக்கு முன்னேறியது டெல்லி: அரையிறுதியில் பெங்கால் அணியை வீழ்த்தியது
    X

    ரஞ்சி டிராபி பைனலுக்கு முன்னேறியது டெல்லி: அரையிறுதியில் பெங்கால் அணியை வீழ்த்தியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் பெங்கால் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    புனே:

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புனேயில் நடைபெற்ற ஒரு அரையிறுதி போட்டியில் பெங்கால் - டெல்லி அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் பெங்கால் அணி 286 ரன்னில் சுருண்டது. சட்டர்ஜி அதிகபட்சமாக 83 ரன்கள் சேர்த்தார். டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் சைனி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 398 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான குணால் சண்டேலா, கவுதம் காம்பீர் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 232 ரன்களும், சண்டேலா 113 ரன்களும் எடுத்தனர். ஹிமந்த் சிங் 60 ரன்கள் சேர்த்தார். பெங்கால் அணியின் முகமது ஷமி அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 112 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று பெங்கால் அணி 2-ம் இன்னிங்சைத் தொடங்கியது. தடுமாற்றத்துடன் ஆரம்பித்த பெங்கால் வீரர்கள், சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்கூட நிலைத்து நிற்க முடியவில்லை. 24.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பெங்கால் அணி 86 ரன்களில் சுருண்டது.  அதிகபட்சமாக சட்டர்ஜி 21 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியின் சைனி (4/35) மற்றும் கெஜ்ரோலியா (4/40) அபாரமாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இதனால் மூன்றாவது நாளில் போட்டி முடிவுக்கு வந்தது.



    இதன் மூலம், டெல்லி அணி இன்னிங்ஸ் மற்றும் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா, கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 185 ரன்களும், கர்நாடகா 301 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை ஆடி வரும் விதர்பா அணி, மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் 79 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள விதர்பா அணி, நாளைய ஆட்டத்தில் கணிசமான அளவுக்கு ரன் குவித்தால் மட்டுமே, கர்நாடக அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
    Next Story
    ×