என் மலர்

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: சுழற்பந்து வீச்சை சமாளிக்க கூடுதல் கவனம் - டாம் லதம்
    X

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: சுழற்பந்து வீச்சை சமாளிக்க கூடுதல் கவனம் - டாம் லதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சை விட சுழற்பந்து வீச்சை சமாளித்து விளையாடுவதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என நியூசிலாந்து வீரர் டாம் லதம் கூறியுள்ளார்.
    மும்பை:

    கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி மும்பை பான்டே மைதானத்தில் நடக்கிறது.

    முன்னதாக நியூசிலாந்து அணி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. முதல் ஆட்டத்தில் தோற்ற நியூசிலாந்து 2-வது போட்டியில் வெற்றி பெற்றது. 2-வது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் டாம் லதம் சதம் அடித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் குறித்து டாம் லதம் கூறியதாவது:-

    எங்களுடைய கவனம் இந்திய சுழற்பந்து வீச்சை எதிர் கொள்வது பற்றி இருக்கிறது. வேகப்பந்து வீச்சை விட சுழற்பந்து வீச்சை சமாளித்து விளையாடுவதில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

    அதில் ரன்களை சேர்க்கவும், பவுண்டரிகள் அடிக்கவும் ஆராய்ந்து வருகிறோம். குல்தீப் யாதவ், சாகல் ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். அவர்கள் முந்தைய தொடர்களில் அசத்தி இருக்கிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடினோம். அது பயன் உள்ளதாக இருந்தது. அந்த அணி வீரர்கள் காலின் முன்ரோ, மார்டின் குப்தில் ஆகியோர் அபாயகரமான வீரர்கள். அவர்கள் நிலைத்து நின்று விட்டால் தடுத்து நிறுத்த முடியாது’ என்றார்.
    Next Story
    ×