என் மலர்

    செய்திகள்

    இந்தியா - பாக். தொடருக்கு பிசிசிஐ சம்மதித்தால், உலக லீக் தொடருக்கு தயார்: பாக். கிரிக்கெட் வாரியம்
    X

    இந்தியா - பாக். தொடருக்கு பிசிசிஐ சம்மதித்தால், உலக லீக் தொடருக்கு தயார்: பாக். கிரிக்கெட் வாரியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருநாட்டு தொடருக்கு இந்தியா சம்மதித்தால் உலக லீக் தொடருக்கு பாகிஸ்தான் தயராக இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐ.சி.சி.யால் அனுமதிக்கப்பட்ட அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகள்தான் முன்னணி செலுத்துகின்றன. கடைநிலையில் இருக்கும் ஜிம்பாப்வே, தற்போது இடம்பிடித்திருக்கும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அதிக அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதனால் அனைத்து அணிகளும் பயன்பெறும் வகையில் டெஸ்ட் லீக் மற்றும் ஒருநாள் லீக் தொடரை அறிமுகப்படுத்த ஐ.சி.சி. ஆர்வம் காட்டி வருகிறது. 2019-ல் இருந்து இந்த தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் தொடரில் பங்கேற்க வேண்டுமெனில், இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு தொடர் நடைபெற போடப்பட்டிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×