என் மலர்

    செய்திகள்

    டிராவிட் கற்றுக் கொடுத்தது அமைதி, ரன்கள் மீது கவனம்: ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகிறார்
    X

    டிராவிட் கற்றுக் கொடுத்தது அமைதி, ரன்கள் மீது கவனம்: ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகிறார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமைதியாக இருந்து அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.
    இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர். உள்நாடு மற்றும் ‘ஏ’ அணிகளுக்காக விளையாடி வரும் ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    கடைசியாக தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டிகளில் 65, 108, 82, 90 மற்றும் 37 ரன்கள் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி காயத்தால் விளையாடாததால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதால் தரம்சாலா போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ஷ்ரேயாஸ் அய்யர் தனது ஆட்டத்திறனை இந்தியா ‘ஏ’ பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிடம் இருந்து கற்று வருகிறார். ராகுல் டிராவிட் எனக்கு கற்றுக் கொடுத்தது அதிக ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதான் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ராகுல் டிராவிட் சார் அற்புதனமான ஆளும் தன்மை கொண்ட நபர். கடந்த சில மாதங்களாக ‘ஏ’ அணி நிகழ்த்தியுள்ள சாதனைகளுக்குப்பின் அவர் உள்ளார். அவரிடம் எல்லா வகையிலான திறமைகளும் உள்ளன. அவர் எனக்கு கற்றுக் கொடுத்தது அமைதியாக இருக்க வேண்டும். மேலும் அதிக ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்து வேண்டும். எதிர்வினை ஆற்றக்கூடாது என்பதுதான்.

    என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படையானது. மற்றவை அதுபோல் நடக்கும். இந்திய அணிக்காக இடம்பெறுவதற்கான சற்று தூரத்தில் நான் உள்ளதான நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×