என் மலர்

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம்: விராட்கோலி
    X

    ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம்: விராட்கோலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது ஹர்த்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டம் தான் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது.

    ஹர்த்திக் பாண்ட்யா 66 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 83 ரன்னும், டோனி 88 பந்தில் 79 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), புவனேஷ்வர்குமார் 5 பவுண்டரியுடன் 32 ரன்னும் (30 பந்து) எடுத்தனர்.

    நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், பல்க்னெர், ஆடம் ஜம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    மழை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மேக்ஸ்வெல் அதிக பட்சமாக 18 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) பல்க்னெர் 25 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சஹால் 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டநாயகான தேர்வு பெற்றார். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தபோது மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் டோனியும், கேதர் யாதவும் சிறப்பாக ஆடினார்கள். பின்னர் ஹர்த்திக் பாண்ட்யாவும், டோனியும் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தனர். மிடில் ஆர்டர் மற்றும் பின்கள மிடில் ஆர்டர் வரிசை வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளனர்.

    ஹர்த்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டம் போட்டியை மாற்றியது. அவர் 3 வகையான திறமைகளையும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சமமாக பெற்றுள்ளார். அவர் நமக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே.

    எங்களது பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. யசுவேந்திர சஹால் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு பந்துவீசினார். இதேபோல பும்ராவும், புவனேஷ்வர்குமாரும் நேர்த்தியாக வீசினார்கள்.

    மழைக்கு பிறகு 20 ஓவர் போட்டி நிலை பந்துவீச்சில் ஏற்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு விராட்கோலி கூறினார்.
    Next Story
    ×