என் மலர்

    செய்திகள்

    2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்
    X

    2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - இலங்கை நாளை மோதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை பல்லகெலேயில் மதியம் 2.30 மணிக்கு நடக்கிறது.
    பல்லகெலே:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணி இடையயான டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

    5 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் தம்புல்லாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை பல்லகெலேயில் நடக்கிறது. இப்போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி பேட்டிங் வரிசையில் பலம் பொருந்தியதாக இருக்கிறது.

    ஷிகர் தவான், ரோகித் சர்மா, வீராட்கோலி, லோகேஷ் ராகுல், டோனி, கேதர் யாதவ், பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். முதல் போட்டியில் ஷிகர்தவான் சதம் அடித்து அசத்தினார்.

    பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, சாஹல், அக்சர் பட்டேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதனால் இந்தியா சம பலத்துடன் திகழ்கிறது. நாளைய ஆட்டத்தில் வென்று 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இருக்கிறது.

    நாளைய ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் தோற்றதால் வெற்றி நெருக்கடியில் உள்ளது.

    அந்த அணியில் டிக்வெலா, குணதிலகா, குசல் மென்டிஸ், மேத்யூஸ், கபுகேந்தரா, பெரைரா, மலிங்கா, சான்டகன், டிசில்வா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    ஆனாலும் இலங்கை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டது. முதல் போட்டியில் தொடக்கத்தை சிறப்பாக கண்ட அந்த அணி அதன்பின் விக்கெட்டுகளை மளமளவென பறி கொடுத்தது.

    இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை முயற்சிக்கும். என்றாலும் வலுவான இந்தியாவை வீழ்த்த போராட வேண்டும்.
    Next Story
    ×