என் மலர்

    செய்திகள்

    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக 377 ரன்கள் குவித்தது இங்கிலாந்து
    X

    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக 377 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.
    இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சானா மிர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் பியூமாண்ட், சாரா டெய்லர் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். பியூமாண்ட் 14 ரன்னிலும், சாரா டெய்லர் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    இதனால் 42 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து இரண்டு வி்க்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு கேப்டர் ஹீதர் நைட் உடன் நடாலியே சிவர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் வீராங்கனைகளின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது.

    இதனால் ரன்கள் மளமளவென உயர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். சதம் அடித்த ஹீதர் நைட் 106 ரன்னிலும், நடாலியே 137 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.


    106 ரன்கள் குவித்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்

    அதன்பின் வந்த டேனியல் வியாத் 27 பந்தில் 42 ரன்னும், ஃப்ரான் வில்சன் 19 பந்தில் 33 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அஸ்மாவியா இக்பால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×