என் மலர்

    செய்திகள்

    மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.
    X

    மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான பாதுகாப்பை ஆய்வு செய்து வருகிறது ஐ.சி.சி.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் லண்டன், பர்மிங்காம் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போட்டி தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது ஐ.சி.சி.-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரையடுத்து ஜூன் 24-ந்தேதி முதல் ஜூலை 23-ந்தேதி வரை பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் நடக்க உள்ளது.

    எனவே, சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா மற்றும் சில நாடுகள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.



    இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் பெண்களுக்கான உலகக்கோப்பை தொடருக்கான உச்சகட்ட பாதுகாப்பு வழங்குவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுடன் இணைந்து எங்களுடைய இந்த தொடருக்கான பாதுகாப்பு இயக்குனரகம் ஆலோசனைகள் நடத்தி வருகிறது.



    இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் வரை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியாக பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×