என் மலர்

    செய்திகள்

    உத்தப்பா, காம்பீர் அதிரடியால் புனேவை வீழ்த்தியது கொல்கத்தா அணி
    X

    உத்தப்பா, காம்பீர் அதிரடியால் புனேவை வீழ்த்தியது கொல்கத்தா அணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.பி.எல். தொடரில் உத்தப்பா, காம்பீர் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரைசிங் புனே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
    புனே:

    ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

    முதலில் விளையாடிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 51 ரன்கள் எடுத்தார். ரகானே (46), திரிபாதி (38) ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் நரேன் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் காம்பீர் உடன் உத்தப்பா இணைந்து அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    புனே வீரர்களின் பந்துவீச்சுகளை உத்தப்பா பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். அவருக்கு கேப்டன் காம்பீரும் உறுதுணையாக ரன்களை சேர்த்தார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

    அதிரடியாக விளையாடிய உத்தப்பா 47 பந்துகளில் 87 ரன்களில் எடுத்திருந்த போது அவுட்டானார். அவரை தொடர்ந்து கேப்டன் காம்பீரும் 62 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவா(6), மணிஷ் பாண்டே(0) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற புனே அணி தனது 4வது தோல்வியை சந்தித்துள்ளது.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய உத்தப்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×