என் மலர்

    செய்திகள்

    சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது
    X

    சாம்பியன் டிராபியில் இருந்து இந்திய அணி விலகாது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி விலகாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
    புதுடெல்லி:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்தப்போட்டிக்கான அணி வீரர்களை அறிவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்தியாவை தவிர மற்ற 7 நாடுகளும் இந்தப்போட்டிக்கான அணிகளின் வீரர்களை அறிவித்துவிட்டன.

    இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. வருவாய் பகிர்வு தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் சசாங்க மனோகரின் யோசனையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்து இருந்தது. அதோடு வீரர்களை அறிவிக்காமலும் இருந்தது. இதன் காரணமாக இந்த சந்தேகம் உருவானது.

    இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இருந்து இந்திய அணி விலகாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. வருவாய் பகிர்வு பிரச்சினை தொடர்பாக ஐ.சி.சி. கூட்டத்தில் இந்தியா பிரச்சினை கிளப்பும் என்று தெரிகிறது.

    ஐ.சி.சி.யின் கூட்டத்துக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் 28-ந்தேதி இந்திய வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் முன்பு ஐ.சி.சி. வருவாயில் அதிக பங்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் ஒரே மாதிரியான வருவாயை வழங்க ஐ.சி.சி. விதியை திருத்தியது.

    இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை ஈடுசெய்ய ரூ.650 கோடியை கூடுதலாக வழங்க ஐ.சி.சி. முன்வந்த யோசனையை இந்தியா நிராகரித்துவிட்டது. ஐ.சி.சி. கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு செய்யப்படும்.
    Next Story
    ×