என் மலர்

    செய்திகள்

    நெருங்கி வந்து தோற்றதால் வருத்தம்: கேப்டன் ரோகித்சர்மா
    X

    நெருங்கி வந்து தோற்றதால் வருத்தம்: கேப்டன் ரோகித்சர்மா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐ.பி.எல். தொடரில் புனேவுக்கு எதிரான போட்டியின்போது 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததையடுத்து கேப்டன் ரோகித் சர்மா நெருங்கி வந்து தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்தார்.
    மும்பை:

    10-வது ஐ.பி.எல். போட்டியில் மும்பையின் ஆதிக்கத்தை தகர்த்து புனே அணி 4-வது வெற்றியை பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

    திரிப்பதி 31 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 32 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), மனோஜ் திவாரி 13 பந்தில் 22 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். கரண்சர்மா, பும்ரா தலா 2 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், ஜான்சன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. இதனால் புனே அணி 3 ரன்னில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மாவின் அதிரடி பலன் இல்லாமல் போனது. அவர் 39 பந்தில் 58 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 27 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர்.



    பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனட்கட் தலா 2 விக்கெட்டும், இம்ரான் தாகீர், கிறிஸ்டியன், வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    மும்பையின் தொடர் வெற்றிக்கு புனே அணி முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. 7-வது தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை அளித்தது.

    பென் ஸ்டோக்ஸ் புனே அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் ரன் எதுவும் கொடுக்காமலேயே தனது ஆரம்ப ஓவரில் 2 விக்கெட்டை சாய்த்தார். 19-வது ஓவரில் அவர் 7 ரன்னே விட்டுக்கொடுத்தது முக்கிய அம்சமாகும். மும்பை இந்தியன்ஸ் அணியை 2-வது முறையாக புனே அணி வீழ்த்தியது.

    இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுமித் கூறியதாவது:-



    ஆட்டத்தின் முடிவு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 40 ஓவர் வரை ஆடுகளம் ஒரே மாதிரியாக இருந்தது. மிடில் ஓவரில் மும்பை அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றியதால் நெருக்கடி கொடுக்க முடிந்தது.

    ஸ்டோக்ஸ் மிகவும் அபாரமாக பந்துவீசினார். கடைசி ஓவரை உனட்கட் மிகவும் கடுமையாக போராடி வீசினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-



    வெற்றிக்கு நெருங்கி வந்து தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் முடிந்தவரை சிறப்பாகவே விளையாடினோம். ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்யாததால் ஏமாற்றம் அடைகிறேன்.

    மிடில் ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் ஒரு சில தவறு செய்தோம். ஓட்டு மொத்தமாக இந்த போட்டி சிறப்பாக இருந்தது.

    ஆடுகளம் சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். புனே அணியில் கடைசி ஓவரை ஜெய்தேவ் நேர்த்தியாக வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் போனதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×