என் மலர்

    செய்திகள்

    ஸ்லெட்ஜிங் செய்து முரளி விஜய், லோகேஷ் ராகுலை அவுட்டாக்கிய ஆஸி. பவுலர்கள்
    X

    ஸ்லெட்ஜிங் செய்து முரளி விஜய், லோகேஷ் ராகுலை அவுட்டாக்கிய ஆஸி. பவுலர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்லெட்ஜிங் செய்து இந்தியாவின் தொடக்க வீரர்களான முரளி விஜய், லோகேஷ் ராகுலை அவுட்டாக்கினார்கள் ஹசில்வுட், கம்மின்ஸ்
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரகானே கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    ரகானே அமைதியான குணாதியசம் கொண்டவர் என்பதால் வார்த்தைக் போர்களில் (ஸ்லெட்ஜிங்) ஈடுபடமாட்டார். அதனால் பெங்களூர் மற்றும் ராஞ்சி டெஸ்ட் போன்று ஆக்ரோஷம் இருக்காது என்று அனைவரும் கூறினார்கள். அதேபோலவே ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது இருந்தது. அந்த அணி 300 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல் போன்றோர் போல்டாகிய போதும்கூட இந்திய வீரர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லை.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனால் ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் பவுன்சர், சீம் மற்றும் ஸ்விங் பந்தால் இருவரையும் திணறடித்தனர். ஆனால் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் திறமையாக சமாளித்தனர்.

    இதனால் விக்கெட் எடுக்க முடியவில்லை என்ற விரக்தியில் ஹசில்வுட், முரளி விஜயுடன் வார்த்தை போர் செய்ய தொடங்கினார். ஒவ்வொரு பந்தையும் வீசிய பின்னர் விஜயை சீண்டிக் கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த விஜய் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு அவுட் ஆனார்.



    அதேபோல்தான் பேட் கம்மின்ஸ் லோகேஷ் ராகுல் உடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். இதனால் ராகுல் பொறுமை இழந்தார். ஒரு பந்தை தடுத்தாடினார். அப்போது பேட் கம்மின்ஸ் லோகேஷ் ராகுலிடம் ஏதோ கூறினார். அடுத்த பந்தை பவுன்சராக வீசினார். இந்த பந்தை எளிதாக விட்டிருக்கலாம். ஆனால் பொறுமை இழந்த ராகுல் அதை அடிக்க முயற்சித்தார். இதனால் தேவையில்லாம் விக்கெட்டை இழந்தார்.

    ஆகவே, இந்திய தொடக்க வீரர்களை சீண்டிவிட்டு, அவர்கள் விக்கெட்டை வீழ்த்திவிட்டார்கள்.
    Next Story
    ×