என் மலர்

    செய்திகள்

    பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து
    X

    பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம்: கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலமாகும்’ என்று அந்த அணியின் புதிய கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
    கராச்சி:

    ‘பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலமாகும்’ என்று அந்த அணியின் புதிய கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து நான்கு 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பார்படோஸ்சில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

    வெஸ்ட்இண்டீஸ் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி கராச்சியில் இருந்து புறப்பட்டு சென்றது. சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் வீரர்கள் ஷர்ஜீல்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், ஷாசாய்ப் ஹசன், நசிர் ஜாம்ஷெட் ஆகியோருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடை விதித்துள்ளதுடன், அவர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்து இருக்கிறது.

    2010-ம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் சூதாட்டத்தில் சிக்கி 5 ஆண்டு தடை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் சிக்கிய பெரிய சூதாட்ட விவகாரம் இதுவாகும். இதனால் இந்த பிரச்சினையை மறந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாகிஸ்தான் அணி எப்படிசெயல்பட போகிறது? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டன் சர்ப்ராஸ் அகமது வெஸ்ட்இண்டீசுக்கு புறப்படும் முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் எழுந்த ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் கடினமான கால கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது உண்மை தான். வரும் போட்டி தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்க வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

    தற்போது ஒருநாள் போட்டி தர வரிசையில் பாகிஸ்தான் அணி 89 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணி 84 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் தான் 8-வது இடத்தை தக்கவைப்பதுடன், அடுத்த உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். தோல்வியை சந்தித்தால் பாகிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே முக்கியமான இந்த போட்டி தொடரை வெல்ல பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. 
    Next Story
    ×