என் மலர்

    செய்திகள்

    மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து 182/6; வெற்றி முனைப்பில் இந்தியா
    X

    மும்பை டெஸ்ட்: இங்கிலாந்து 182/6; வெற்றி முனைப்பில் இந்தியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மும்பை டெஸ்டின் 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 182 ரன்களுக்குள் 6 விக்கெட்டை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 147 ரன்னுடனும், ஜயந்த் யாதவ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியும், ஜயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். ஜயந்த் யாதவ் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் ஆட்டத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 631 ரன்கள் குவித்தது. விராட் கோலி 235 ரன்னும், ஜயந்த் யாதவ் 104 ரன்னும் குவித்தனர். ஏற்கனவே முரளி விஜய் 136 ரன்கள் குவித்திருந்தார்.

    அடுத்து 231 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜென்னிங்ஸ் இந்த இன்னிங்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இவர் புவனேஸ்வர்குமார் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து குக் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் களம் இறங்கியது முதலே அதிரடியாக விளையாடினார். குக் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மொயீன் அணி ரன்ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். மொயீன் அலி அவுட்டாகும்போது இங்கிலாந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் 75 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியாக விளையாடினார்கள்.

    இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 141 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 77 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஜயந்த் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக் 18 ரன்னில் அவுட் ஆனார். ஆனால் பேர்ஸ்டோவ் மறுமுனையில் அரைசதம் அடித்தார்.



    அஸ்வின் வீசிய கடைசி ஓவரில் ஜேக் பால் அவுட்டாக இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 182 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    பேர்ஸ்டோவ் 50 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் ஜயந்த் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.



    தற்போது வரை இங்கிலாந்து அணி 49 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் நான்கு விக்கெட்டுக்கள் உள்ளது. பேர்ஸ்டோவ் 50 ரன்னுடன் களத்தில் உள்ளார். இன்னும் படலர் உள்ளார். இந்த இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டும் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. கடைசி நாளில் 100 ரன்களுக்கு மேற்பட்ட ஸ்கோலை சேசிங் செய்வது கடினமானதாகும். அப்படி 100 ரன்களுக்கு மேல் இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயித்தால் போட்டி பரபரப்பானதாகிவிடும்.

    அதேசமயத்தில் பேர்ஸ்டோவ் அல்லது பட்லர் ஆகியோரில் ஒருவரை நாளை காலை உடனடியாக வீழ்த்திவிட்டால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் இந்த டெஸ்டில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.
    Next Story
    ×