என் மலர்

    செய்திகள்

    திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபை தேர்தல்: மேகாலயா, நாகலாந்தில் பிப்.27-ல் வாக்குப்பதிவு
    X

    திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபை தேர்தல்: மேகாலயா, நாகலாந்தில் பிப்.27-ல் வாக்குப்பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Election #AssemblyElection #Tripura #Meghalaya #Nagaland
    புதுடெல்லி:

    மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதால் இன்று முதல் அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

    திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதியும் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3-ம்தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மூன்று மாநிலங்களிலும் தலா 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் காங்கிரசும், திரிபுராவில் இடதுமுன்னணியும், நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணியுடன் நாகா மக்கள் முன்னணியும் ஆட்சியில் உள்ளன.

    இந்த தேர்தலை மையப்படுத்தி பா.ஜ.க. தலைவர்கள் சமீப காலமாக வடமாநிலங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் காங்கிரசும் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. #Election #AssemblyElection #Tripura #Meghalaya #Nagaland
    Next Story
    ×