என் மலர்

    செய்திகள்

    பல மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தின் தடையை எதிர்த்து வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
    X

    பல மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தின் தடையை எதிர்த்து வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜஸ்தான், குஜராத் உள்பட பல மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்தின் தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. #Padmaavat #DeepikaPadukone #SupremeCourt
    புதுடெல்லி:

    சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவத்' என்ற பெயரில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க இந்தியில் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. சென்சார் போர்டும் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்சார் போர்டு அனுமதி வழங்கியது.

    வருகிற 25-ந்தேதி 'பத்மாவத்' படம் நாடு முழுவதும் திரையிடப்படுகிறது. தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநில அரசுகள் படத்தை திரையிட அனுமதி மறுத்துவிட்டது. மராட்டியம், கோவா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகளும் தடைவிதிக்க பரிந்துரைத்து வருகிறது.

    இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் சென்சார் போர்டு அனுமதி அளித்த பின்பும் பத்மாவத் படத்துக்கு தடை விதிப்பது சட்டவிரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  #Padmaavat #DeepikaPadukone #SupremeCourt
    Next Story
    ×