என் மலர்

    செய்திகள்

    நீதிபதிகள் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அட்டர்ஜி ஜெனரல்
    X

    நீதிபதிகள் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை: அட்டர்ஜி ஜெனரல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இடையிலான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியுள்ளார். #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

    நீதிபதிகளிடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய பார் கவுன்சில் சார்பில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

    அதன்பின்னர் நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிமன்ற அறைகளும் வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும் பார் கவுன்சில் நேற்று அறிவித்தது. பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ள அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதி மற்றும் 4 நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கருத்து தெரிவித்தார். இன்னும் 2 அல்லது 3 நாளில் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். #SC #tamilnews

    Next Story
    ×