என் மலர்

    செய்திகள்

    இந்தியா தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலி: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
    X

    இந்தியா தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலி: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் வழங்கி உள்ளது.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தின் கெரி செக்டாரில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதற்கிடையே, இந்திய ராணுவம் இன்று காலை எல்லையை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று அங்கிருந்த பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது.  இதில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர், ஒருவர் காயம் அடைந்தார்.  இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், பாதுகாப்பு படை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து, இந்திய தூதர் ஜே.பி. சிங்கிற்கு பாகிஸ்தான் சம்மன் வழங்கி உள்ளது.

    இந்திய ராணுவம் பதிலடியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது என்பதை மறுத்து உள்ள பாகிஸ்தான், தனது ராணுவ வீரர்களின் உயிரிழப்பு கண்ணி வெடிகுண்டு வெடித்ததன் காரணமாகவே ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×