என் மலர்

    செய்திகள்

    ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமி பல மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு
    X

    ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமி பல மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமியை பல மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
    புபனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் குலாசர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் சாகுவின் மகள் ராதா சாகு ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து தீயணைப்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் குழந்தையை மீட்க பல மணி நேரம் போராடினர்.



    ஆழ்துளைக்கிணற்றிற்கு அருகில் 16 அடியில் குழி தோண்டினர். பின்னர் அதன்வழியாக தீயணைப்புப்படை வீரர் சென்று குழந்தையை மீட்டார். குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



    இதைத்தொடர்ந்து. முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தீயணைப்புப்படை வீர்ர்களின் இந்த கடின முயற்சிக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். 'அனைவரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டனர். அதனால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தொடர்ந்து இதே போன்று செயல்பட வேண்டும். மேலும் அந்த குழந்தை விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்' என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் டுவிட்டரில் தெரிவித்தார்.

    பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தீயணைப்புப்படையினர் மற்றும் ஒடிசா பேரிடர் மீட்புப்படையினருக்கும் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×