என் மலர்

    செய்திகள்

    தீபிகா படுகோனே தலைக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்த அரியானா பா.ஜ.க. தலைவர் ராஜினாமா
    X

    தீபிகா படுகோனே தலைக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்த அரியானா பா.ஜ.க. தலைவர் ராஜினாமா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பத்மாவதி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி நடித்த தீபிகா படுகோனே ஆகியோர் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவித்த அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
    சண்டிகர்:

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    இதற்கிடையில், பத்மாவதி படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என அரியானா மாநில பா.ஜ.க.வின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சூரஜ் பால் அமு என்பவர் அறிவித்திருந்தார்.

    இவ்விவகாரம் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர் பயத்தால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதை தீபிகா தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

    பொது அரங்கில் கொலை மிரட்டல் விடுப்பதுபோல் தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைகளுக்கு பத்து கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என பகிரங்கமாக தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சூரஜ் பால் அமுவுக்கு அரியானா மாநில பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இந்நிலையில், தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து சூரஜ் பால் அமு ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் சுபாஷ் பராலாவுக்கு அனுப்பி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×