என் மலர்

    செய்திகள்

    இந்து அமைப்புகள் போராட்டம்: பத்மாவதி படம் பிரிட்டனில் வெளியாவதிலும் சிக்கல்?
    X

    இந்து அமைப்புகள் போராட்டம்: பத்மாவதி படம் பிரிட்டனில் வெளியாவதிலும் சிக்கல்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்துவரும் பத்மாவதி படத்துக்கு பிரிட்டனில் வாழும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் டிசம்பர் முதல் தேதி அங்கு படம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
    லண்டன்:

    வரலாற்றை மையமாக வைத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பத்மாவதி திரைப்படம் இந்தியாவில் டிசம்பர் முதல் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியை தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 அறிவித்தது. 

    இதற்கிடையே, மத்தியப்பிரதேம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    பத்மாவதி படத்தை பிரிட்டன் நாட்டில் திரையிடும் உரிமையை பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற வினியோக நிறுவனம் வாங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள சென்சார் போர்டு இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    இந்நிலையில், பத்மாவதி படத்தை பிரிட்டனில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க இங்குள்ள இந்து அறக்கட்டளை அமைப்பின் ஒரு பிரிவான ராஜபுத்திர சமாஜம் மற்றும் கர்னி சேனா ஆகிய அமைப்புகள் தீர்மானித்துள்ளன. அமைதியான முறையில் போராட்டம் நடத்தப் போவதாக ராஜபுத்திர சமாஜம் அறிவித்துள்ள நிலையில் பத்மாவதி படத்தை திரையிடும் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம் என கர்னி சேனா அமைப்பும் தெரிவித்துள்ளன.

    இதனால், ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கலாமா? என பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பத்மாவதி படம் திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
    Next Story
    ×