என் மலர்

    செய்திகள்

    பத்மாவதி விவகாரத்தில் மவுனம் ஏன்?: பிரதமருக்கு சத்ருகன் சின்கா கேள்வி
    X

    பத்மாவதி விவகாரத்தில் மவுனம் ஏன்?: பிரதமருக்கு சத்ருகன் சின்கா கேள்வி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பத்மாவதி படம் தொடர்பாக சர்ச்சை பற்றி எரியும் நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர்மோடி, ஸ்மிரிதி இராணி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மவுனம் காப்பது ஏன்?: பா.ஜ.க, எம்.பி. சத்ருகன் சின்கா வினவியுள்ளார்.
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

    ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த சித்தூர் ராணி பத்மாவதி டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் இந்த படத்தில் நடித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோனேவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

    லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது. அவரது தலைக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் சிலர் அறிவித்துள்ளனர்.

    அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு இந்த தொகையை உயர்த்தினார். தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலைகளை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார். தொடரும் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோனே அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீபிகா, பன்சாலிக்கு மிரட்டல் விடப்பட்டிருப்பதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘'நடிகை, இயக்குனர் தலைக்கு ஒருவர் ரூ.5 கோடி விலை அறிவிக்கிறார், இன்னொரு கட்சி பிரமுகர் ரூ.10 கோடி பரிசு அறிவிக்கிறார்.

    பண மதிப்பிழப்புக்கு பிறகும் இவ்வளவு பெரிய தொகைகளை பரிசாக அவர்களால் எப்படி அறிவிக்க முடிகிறது? என்பது ஆச்சர்யமாக உள்ளது. சரி அதற்கு ஜி.எஸ்.டி. வரி உண்டா? இதை ஜோக்கிற்காக கேட்கிறேன்' என பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பத்மாவதி படம் தொடர்பாக சர்ச்சை பற்றி எரியும் நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர்மோடி, ஸ்மிரிதி இராணி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மவுனம் காப்பது ஏன்?: பாலிவுட் நடிகரும் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்ருகன் சின்கா வினவியுள்ளார்.

    மிகவும் பிரபலமான பிரதமர் என்று அமெரிக்க சிந்தனையாளர்களால் பாராட்டப்படும் நமது மாண்புமிகு பிரதமர் மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி இவ்விகாரத்தில் ஏதும் பேசாமல் மவுனமாக இருப்பது ஏன்? பற்றி எரியும் சர்ச்சையாக பத்மாவதி மாறிவரும் நிலையில் பிரபல பாலிவுட் கதாநாயகர்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான் ஆகியோர் ஏதும் கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று மக்கள் கேட்கின்றனர் எனவும் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×