என் மலர்

    செய்திகள்

    டெல்லியில் நடந்துவந்த தமிழக விவசாயிகளின் 100 நாள் போராட்டம் நிறைவடைந்தது
    X

    டெல்லியில் நடந்துவந்த தமிழக விவசாயிகளின் 100 நாள் போராட்டம் நிறைவடைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.
    புதுடெல்லி:

    விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவந்தார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஜூலை 16-ந்தேதி முதல் நடந்துவந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.

    விவசாயிகள் நேற்று தங்களது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, ‘விவசாயிகள் கழுத்தை அறுக்காதீர்கள்’ என்று கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். நேற்றுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு விவசாயிகள் அனைவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர்.

    அய்யாக்கண்ணு கூறுகையில், ‘இந்த ஆண்டில் மொத்தம் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். ஆனாலும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. அடுத்த மாதம் 20, 23-ந்தேதிகளில் 5 லட்சம் விவசாயிகள் பாராளுமன்றத்தை முற்றுகையிட உள்ளோம்’ என்றார். 
    Next Story
    ×