என் மலர்

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவு
    X

    ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 அலகாக பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷமீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 6.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்தன. எனினும், நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை.

    நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த செப்டம்பர் 24-ம்தேதி இதேபோல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாரமுல்லா மாவட்டத்தின் சம்பால் நகரில் உணரப்பட்டது.

    இதேபோல் ஆகஸ்ட் 24-ம் தேதி 5.0 ரிக்டர் அளவில் ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி ஏற்ட்ட நிலநடுக்கம்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×