என் மலர்

    செய்திகள்

    பதவியை காப்பாற்றிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசிவருகிறார்: தினகரன்
    X

    பதவியை காப்பாற்றிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசிவருகிறார்: தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசிவருகிறார் என குடகு விடுதியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
    பெங்களூரு:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சந்தித்த தினகரன் குடகு விடுதியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி இருக்கிறார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை போடவிடாமல் தினகரன் தடுத்துவிட்டார் என்றும் அவர் பேசி இருக்கிறார்.

    அவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் இப்படி பேசுகிறார். அவர் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு என்ன பேசினார் என்பதை கவனிக்க வேண்டும். சசிகலா தயவால் பதவிக்கு வந்ததை மறந்துவிட்டு இன்று பதவியை காப்பாற்ற அவர் இப்படி மாறி மாறி பேசி வருகிறார், அவரது பேச்சில் உண்மை இல்லை.

    ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த ஆட்சிக்கு சிறு சலனமும் இல்லாமல் அதை காப்பாற்றியவர் சசிகலா. கட்சி பொறுப்பில் உள்ள அவர் ஆட்சி பொறுப்பையும் கவனிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த முன்னோடிகள் சசிகலாவை வற்புறுத்தினார்கள், அவர் 2 பொறுப்பையும் ஏற்க சம்மதித்தார்.

    இப்போது நாங்கள் நீக்கி உள்ள மதுசூதனன் உள்ளிட்ட அனைவரும் சசிகலாவை முதல்-அமைச்சராக்க சம்மதித்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் சிறைக்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கி விட்டு சென்றார்.


    சசிகலா சொன்னதால் எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். இதற்கு முன்பு முதல்-அமைச்சராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், மு.க.ஸ்டாலினையும் பார்த்து சிரிக்கிறார், பேசுகிறார் என்று தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட அனைத்து மணியான அமைச்சர்களும் சசிகலாவிடம் வந்து புகார் செய்தனர்.

    அவர் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதாக கூறி அவரை மீண்டும் முதல்-அமைச்சராக்கக் கூடாது என்று சசிகலாவிடம் வலியுறுத்தினார்கள். இதனால் தான் எடப்பாடியை முதல்-அமைச்சராக்கினோம்.

    ஆனால் அவர் ஓ.பன்னீர் செல்வத்தோடு சேர்ந்து சசிகலாவுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார்.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்கக்கூடாது என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த ஓ பன்னீர் செல்வத்தையும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை கிடப்பில் போட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யாத சபாநாயகர் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்? தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம் இதில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் எங்களுக்கே நீதி தேவதை கருணை காட்டி எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை தெரியப்படுத்தும்.

    தேர்தல் கமி‌ஷனில் கட்சியையும் இரட்டை இலையையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நேற்று மனு கொடுத்துள்ளனர். இந்த மனு தொடர்பாக அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு அனுப்பி உள்ளது. அவர்தான் பொதுச்செயலாளர் என்பதை தேர்தல் கமி‌ஷனே அங்கீகரித்துவிட்டது.

    அவர் சார்பில் எனக்கும் நோட்டீசு வந்துள்ளது. எங்கள் தரப்பு வாதங்களை வக்கீல் தேர்தல் கமி‌ஷனில் வெளிப்படுத்துவார்.

    அமைச்சர்களுக்கு பதவி இருப்பதால் எதை வேண்டுமானமாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்சி இல்லை என்றால் அமைச்சர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

    கடந்த ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது நோய் தொற்று ஏற்படும் என்ற காரணத்தை காட்டி அக்டோபர் 1-ந் தேதிக்கு பிறகு சசிகலாவை கூட ஜெயலலிதாவை சந்திக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை சந்திக்க தயார், அப்படி விசாரணை நடத்தினால் முதலில் மாட்டக்கூடியவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

    அம்மா அமைத்த அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்த ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று எடப்பாடி பழனிசாமி கைகோர்த்து உள்ளார். இன்னும் சொல்லப்போனால் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று கூறியது மட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்து அவரை துணை முதல்-அமைச்சராக்கி கட்சிக்கும் ஆட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார். சசிகலாவுக்கும் அவர் துரோகம் செய்துள்ளார். நாங்கள் கட்சியை காப்பாற்ற முயற்சி எடுத்துவருகிறோம். இந்த முயற்சியில் எந்த பதவியையும் எதிர்பார்க்காத எங்கள் எம்எல்.ஏ.க்கள் கட்சியை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    எங்களுக்கு ஆதவு கொடுக்கும் 21 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தல் நடந்தால் எங்களுக்கு வெற்றி உறுதி. நான் செல்லும் இடம் எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பொது மக்களும், தொண்டர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்கள் பின்னால் அணி வகுத்து நிற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×