என் மலர்

    செய்திகள்

    காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை கைது செய்தது அமலாக்கத் துறை
    X

    காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை கைது செய்தது அமலாக்கத் துறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஹவாலா மோசடி மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மீது 10 ஆண்டுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த புகாரில் ஷபீர் ஷாவுக்கு அமலாக்க துறை தொடர்ச்சியாக பல்வேறு சம்மன் அனுப்பி வந்தது. இருப்பினும் ஷா அமலாக்கத் துறை முன்பு நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, டெல்லி நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக கடந்த மாதம் பினையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது

    இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஷபீர் ஷாவை அமலாக்கத் துறை நேற்று கைது செய்துள்ளது.

    ஸ்ரீநகரில் வைத்து ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×