என் மலர்

    செய்திகள்

    ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற திட்டமா?
    X

    ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை: சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற திட்டமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகை தொடர்பான விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பெங்களூரூ:

    பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மீது டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

    மேலும் முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தெல்கி மற்றும் கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர கூடுதல் கமி‌ஷனர் ரவி, மைசூரு சிறை சூப்பிரண்டு ஆனந்தரெட்டி ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சிறையில் விதிமுறை மீறல்கள் நடந்ததா? கண்காணிப்பு கேமிராக்கள் சரியாக இயங்குகின்றனவா? என்றும் ஆய்வு செய்தனர். சிறைத்துறை தலைமை சூப்பிரண்டு மற்றும் பெண்கள் சிறை சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

    கைதிகளை பார்க்க வந்த பார்வையாளர்கள் குறித்தும், பார்வையாளர்கள் கையேடு சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    அந்த குழுவினர் இன்று மாலை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.


    தற்போது சிறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்கின்றனர். சிறையில் கைதிகள் சீருடை அணிந்திருக்கிறார்களா? அவர்கள் சிறையில் கொடுக்கப்படும் வேலைகளை செய்கிறார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் தெல்கி மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவர்கள் சசிகலா மற்றும் இளவரசியிடமும் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்- மந்திரியும் கர்நாடக பொது கணக்கு குழு தலைவருமான அசோக் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மெகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோரை அழைத்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை என்று ஒப்புக் கொண்டனர்.

    மேலும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்த அசோக் தலைமையிலான பாரதிய ஜனதா குழுவினர் இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட மத்திய உள்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநில அரசின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியும்.

    பெங்களூருவில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு (ஐ.பி.) அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

    ஏற்கனவே டெல்லி போலீசார் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் உதவியாளரும், ஆஸ்திரேலியா வாழ் கர்நாடக தொழில் அதிபருமான பிரகாஷிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து மத்திய உள்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி பேரம் பேசப்பட்டு அதில் ரூ.1 கோடி மட்டும் ஹவாலா மூலம் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த பண விவகாரத்தில் தொடர்புடைய பிரகாஷ், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, பிரகாசின் நண்பர்களான நிஜாமுதீன், சபிதா, டேனியல் உள்ளிட்டவர்களிடம் மத்திய உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்திஉள்ளனர்.

    இவர்கள் அனைவருமே தற்போது மத்திய உள்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    தற்போது சசிகலா விவகாரம் குறித்து கர்நாடக அரசு உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் கட்ட விசாரணை அறிக்கை வருகிற புதன்கிழமைக்குள் தாக்கல் ஆகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் இறுதிக் கட்ட அறிக்கை தாக்கல் ஆக உள்ளது. இந்த அறிக்கை வெளியான பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளை பார்த்து விட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

    சசிகலா விவகாரத்தை வைத்தே கர்நாடகாவில் அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் அந்த மாநில பாரதிய ஜனதா கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
    Next Story
    ×