என் மலர்

    செய்திகள்

    புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார் சுதர்சன் பட்நாயக்
    X

    புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார் சுதர்சன் பட்நாயக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, அவரது மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான ராம்நாத் கோவிந்த், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரைவிட சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியாவின் 14-ஆவது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது
    வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில், ஒடிசா கடற்கரையில் ராம்நாத் கோவிந்தின் மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் வரைந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து ராம்நாத் கோவிந்த் மணல் சிற்பத்தை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
    Next Story
    ×