என் மலர்

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தடையை மீறி பிரச்சாரம்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மீண்டும் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வன்முறையை தூண்டும் வகையில் தடையை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதற்காக ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகம்மது யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான உம்மத் - இ - இஸ்லாமியா அமைப்பின் தலைவர் மவுலானா சர்ஜான் பர்காதி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இதேபோல், அம்மாநிலத்தில் சக்தி வாய்ந்த பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டுக் கட்சி தலைவர்களும் வீட்டுக்காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    பிரிவினைவாதம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் யாரும் பிரச்சாரம் செய்கிறார்களா? என்பதை மாநில போலீசார் தீவிரமாக 
    கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சாரார் - இ - ஷ்ரீப் பகுதியில் உள்ள ஷேக் நூருதீன் வாலி என்பவரது நினைவிடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முகம்மது யாசின் மாலிக் பிரச்சாரம் செய்தார். 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி பொதுமக்களை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதாக தனது பேச்சுக்கு இடையில் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, தடுப்புக்காவல் சட்டத்தின் படி அவரை கைது செய்ய போலீசார் தீர்மானித்தனர். ஸ்ரீநகரின் மைசுமா பகுதியில் உள்ள யாசின் மாலிக் வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார், அவரை அதிரடியாக 
    கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×