என் மலர்

    செய்திகள்

    எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம்
    X

    எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குண்டுவீசி அழித்தது இந்திய ராணுவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு-காஷ்மீர் எல்லையை ஒட்டி உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ராணுவ நிலை மற்றும் பதுங்கு குழிகள் முற்றிலும் சேதமடைந்தன.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஆத்திரத்தை தூண்டும் வகையில் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலை அவ்வப்போது இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனால் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.

    எல்லையை ஒட்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த ஆண்டு சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் வியூகத் தாக்குதலை நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இந்நிலையில் நவ்காம் செக்டாரில் கடந்த சனிக்கிழமை இந்திய ராணுவம் பயங்கரவாத ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. அப்போது 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் குழுவாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது நவ்காம் செக்டாரில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் பாகிஸ்தான் எல்லையில் காஷ்மீரின் ரஜோரி, நவ்ஷேரா பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டாரில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அழித்திருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.



    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வந்ததால் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும், எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வந்ததால் சமீபத்தில் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    “பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி வருகிறது. எல்லையில் நவ்ஷேரா செக்டாரில் அத்துமீறி நடத்தும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் முழு அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய ராணுவத்தின் கடுமையான தாக்குதலில் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் சேதமடைந்தன. பதுங்கு குழிகள் முற்றிலும் நொறுங்கியது. எல்லையில் கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது’ என்றும் ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி அசோக் நருலா தெரிவித்தார்.

    ஆனால், தாக்குதல் நடந்த நாள் மற்றும் நேரம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
    Next Story
    ×