என் மலர்

    செய்திகள்

    தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு விமானப்படையினருக்கு தளபதி உத்தரவு
    X

    தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு விமானப்படையினருக்கு தளபதி உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த எந்நேரமும் தயாராக இருக்குமாறு இந்திய விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ்.தானோவா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் சமீபகாலமாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுகிறார்கள்.

    எல்லையில் உள்ள கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். எல்லையில் உள்ள கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் எல்லைப் பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காஷ்மீரில் பதட்டம் நிலவுகிறது.



    எனவே பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் 2 இந்திய வீரர்கள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் உடலை சிதைத்து வீசி பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டது. மேலும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி ஜாதவ் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் தூக்கு தண்டனை விதித்து உள்ளது. இந்த சம்பவங்களும் இந்தியாவை ஆத்திரம் அடையச் செய்துள்ளது.

    இந்த நிலையில் இந்திய விமானப்படை தலைமைத் தளபதி பி.எஸ்.தானோவா விமானப்படை அதிகாரிகளுக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த நேரிடலாம். எனவே எப்போதும் தயார் நிலையில் இருங்கள் என்று தளபதி தானோவா கூறியுள்ளார்.

    தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்புக்கு எப்போதும் மிரட்டல் இருந்த வண்ணம் உள்ளது. எனவே நாம் தயாராக இருக்க வேண்டும். குறுகிய நேரத்தில் தாக்குதல் நடத்துவதற்கு எற்ற நிலையில் நாம் இருக்க வேண்டும். இதுதொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபடுங்கள்.

    தாக்குதலில் சிறந்து விளங்கும் வகையில் நாம் இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நாம் போரில் ஈடுபட நேர்ந்தால் வெல்ல முடியும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    தளபதி ரகசியமாக எழுதிய கடிதம் வெளியில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானப் படையில் உள்ள கிட்டத்தட்ட 12 ஆயிரம் அதிகாரிகளுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் இது எப்படி கசிந்தது என்று தெரியவில்லை.
    Next Story
    ×