என் மலர்

    செய்திகள்

    ராகுல்காந்தி அக்டோபரில் காங்கிரஸ் தலைவர் ஆகிறார்: மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை
    X

    ராகுல்காந்தி அக்டோபரில் காங்கிரஸ் தலைவர் ஆகிறார்: மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வர ராகுல்காந்தி அக்டோபர் மாதம் 15-ந் தேதி கட்சி தலைவர் பதவியை ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி, டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஆகியவை குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தனது வீட்டில் மூத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். மாநில தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    அப்போது காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்காததுதான் காரணம் என்று பலரும் ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர்.

    தேர்வு செய்யப்பட்ட கட்சி தலைவர்களை ராகுல் காந்தி சரியாக நம்பவில்லை என்றும். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கவில்லை என்றும் சில தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    கட்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாக கட்சியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உள்ள தலைவர்கள் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

    ராகுல்காந்தியின் தலைமை பணி சரி இல்லாததுதான் இதற்கு காரணம் என்றும் சில தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.


    பாரதீய ஜனதாவுக்கு சரியான போட்டியை நாம் உருவாக்கவில்லை. எந்த குறிக்கோளும் இல்லாமல் கட்சி செயல்பட்டு கொண்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் உரிய பணிகளை மேற் கொள்ளவில்லை.

    பாரதீய ஜனதாவுக்கு எதிராக பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை, பசுவதை பிரச்சினை, ஊழல் போன்ற வி‌ஷயங்களில் காங்கிரசின் செயல்பாடு பாரதீய ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையவில்லை.

    இது போன்ற முக்கிய வி‌ஷயங்களை கையில் எடுத்து பிரசாரங்கள் மேற் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    மோடியின் கருத்துக்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட வேண்டும். செயல்படாமல் உள்ள மூத்த தலைவர்களை பொறுப்பில் இருந்து மாற்றி விட்டு புதிய தலைவர்களை அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

    இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மாற்றி எழுச்சி பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    கட்சி பணிகளை துடிப்பாக செய்ய ராகுல்காந்தி உடனடியாக கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    இதையடுத்து அக்டோ பர் மாதம் 15-ந் தேதி ராகுல்காந்தி கட்சி தலைவர் பதவியை ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதற்கிடையே பிரியங்கா காந்தியையும் தீவிர அரசியலில் இறங்க செய்ய வேண்டும். 2019 பாராளுமன்ற தேர்தலில் அவருடைய பணிகள் முக்கியமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×