என் மலர்

    செய்திகள்

    மணிப்பூரில் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவு: மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர்
    X

    மணிப்பூரில் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவு: மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
    இம்பால்:

    மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. நாகலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதியிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க, மேலும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற போதிலும், காங்கிரசால் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியவில்லை. அந்த கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்ததால் அக்கட்சி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக பிரேன் சிங் பதவியேற்றார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர். கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ.க்கள் ஒய்.சர்சந்திரா, நிகம்தாங் ஹவோகிப், லூகோய் மற்றும் எஸ்.பீரா ஆகிகோரை முதல்வர் பிரேன் சிங், மாநில பா.ஜ.க. தலைவர் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.



    ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில், இன்று மேலும் 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியது, அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    முதலில் வெளியேறிய இரண்டு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பான மனுக்களை சபாநாயகர் பரிசீலனை செய்து வருகிறார்.
    Next Story
    ×